Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதிக மின்கட்டணம் வசூல் மனு தலைமை அமர்வுக்கு மாற்றம்

அதிக மின்கட்டணம் வசூல் மனு தலைமை அமர்வுக்கு மாற்றம்

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல், மின் கட்டணம், முந்தைய பில்லை விட 2, 3 மடங்கு அதிகமாக வருவது குறிப்பிடக்கத்தக்கது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் அதிக மின் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த காமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: 

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், 100 யூனிட் இலவச மின்சாரத்தை, 200 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பித்த பின், கடந்த ஒன்றரை மாதங்களாக மின் கட்டணம், முந்தைய பில்லை விட 2, 3 மடங்கு அதிகமாக வந்துள்ளது. 

இதுசம்பந்தமாக ஒன்றரை லட்சம் பேர் வரை புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம், தொடர்ந்து அதிக கட்டணங்களை விதித்து வருகிறது. 3 மாதங்களுக்கு முன் 2000 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் விதிப்பதில் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குழு ஒன்றை நியமித்து விசாரிக்க வேண்டும். பழைய கட்டண நிர்ணய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா, பொது நல வழக்காக இருப்பதால், மனுவை தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு பரிந்துரைத்துள்ளார்.

முந்தைய செய்தி
தீபாவளி விற்பனைக்குத் தயாராகும் திருப்பூர் காதர்பேட்டை ஜவுளிச் சந்தை!
அடுத்த செய்தி
கொடைக்கானல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

தொடர்புடைய செய்திகள்